ஆர்ஆர்ஆர் - தோஸ்த் பாடலை வைரலாக்கிய என்டிஆர் - ராம்சரண்
ADDED : 1513 days ago
ராஜமவுலி இயக்கத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் நடித்து வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் பிரமோஷன் பாடலை ஐந்து மொழிகளில் வெளியிட்டார் ராஜமவுலி. அந்த நட்பு குறித்த பாடலில் பணியாற்றிய இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், பாடகர், பாடகிகள் மட்டுமின்றி ஜூனியர் என்டிஆர், ராம்சரணும் தோன்றினார்கள்.
இந்தநிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக உக்ரைனில் முகாமிட்டுள்ள ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகிய இருவரும் ஒரு வாகனத்தில் படப்பிடிப்புக்கு செல்கிறார்கள். அப்போது அந்த தோஸ்த் பாடலை ஒலிக்க விட்டபடி தாங்கள் பயணிக்கும் வீடியோ ஒன்றினை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து அந்த வீடியோவை அவர்களது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.