ஒத்த செருப்பு ஹிந்தி ரீ-மேக்கில் அபிஷேக்
ADDED : 1514 days ago
பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கி, தயாரித்த படம் ‛ஒத்த செருப்பு'. விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற இப்படம் தேசிய விருதையும் வென்றது. இப்படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆவதாக அறிவித்தார் பார்த்திபன். இதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் இப்படம் துவங்கி விட்டது. பார்த்திபனே இயக்க, நாயகனாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். அபிஷேக்கின் தந்தை அமிதாப் தயாரிக்கிறார். தமிழில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜி, எடிட்டர் சுதர்சன் ஹிந்தியிலும் பணியாற்றுகிறார்கள். சென்னையில் இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. முன்னதாக நேற்று இப்படத்திற்கான போட்டோ ஷூட் பணிகள் நடந்தன. இதனிடையே இப்படத்திற்கு பேட்டா சைஸ் 7 என பெயர் வைக்க எண்ணி உள்ளனர்.