700 எபிசோட்களை கடந்த அம்மன்: கேக் வெட்டி கொண்டாட்டம்
ADDED : 1516 days ago
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அம்மன். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் தற்போது 700வது எபிசோடை கடந்திருக்கிறது. முதலில் ரவி பிரியன் இயக்கினார். இப்போது பரமேஸ்வரன இயக்குகிறார்.
இதில் அமல்ஜித் ஈஸ்வராகவும், பவித்ரா கவுடா சக்தியாகவும், ஜெனிபர் சாரதாவாகவும், நிஷா லோகாம்பாளாகவும், சந்திரிகா மந்திரமாகவும், அனிதா நாயர் லட்சுமியாகவும் அழகப்பன் அழகுராஜாவாகவும் நடிக்கிறார்கள். ஜெ.அகமது தயாரிக்கிறார்.
700வது எபிசோடை கடந்த வெற்றியை தொடர் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். பவித்ரா, அமல்ஜித், நிஷா, ஜெனிபர், ஹரிசங்கர், அழகப்பன் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் கலந்து கொண்டனர்.