மேலும் செய்திகள்
விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின்
1485 days ago
எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா
1485 days ago
ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ?
1485 days ago
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டில் வெளிவந்த படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. அப்படத்தில் மணியமுதவன், விக்னேஷ் சிவன் எழுதி, அந்தோணி தாசன் எழுதிய 'சொடக்கு மேல சொடக்கு' பாடல் அப்போதே சூப்பர் ஹிட்டானது. யு டியூபில் அந்த வீடியோ பாடல் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்பாடல் தற்போது 100 மில்லியனைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், யு டியூப் தளத்தில் இன்னும் சில ஆயிரங்கள் பார்வை அதற்குக் குறைவாக உள்ளது.
இப்பாடல் 100 மில்லியனைக் கடந்த 26வது தமிழ் சினிமா பாடல். நேற்றுதான் 'விஸ்வாசம்' படத்தின் அடிச்சி தூக்கு பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 25வது பாடலாக பட்டியலில் இடம் பிடித்தது. சூர்யாவின் இரண்டாவது 100 மில்லியன் பாடல் இது. இதற்கு முன்பு 'என்ஜிகே' படத்தில் இடம் பெற்ற 'அன்பே பேரன்பே' 100 மில்லியன் சாதனையைக் கடந்திருக்கிறது.
அனிருத் இசையமைப்பில் 100 மில்லியனைக் கடந்த 6வது தமிழ் சினிமா பாடல் இது.
1485 days ago
1485 days ago
1485 days ago