உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தந்தை கமலுடன் இருக்கும் படங்களை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

தந்தை கமலுடன் இருக்கும் படங்களை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மூத்த மகளான ஸ்ருதி, தனது திறமையால் படிப்படியாக முன்னேறி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், கடந்த 2009ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'லக்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7-ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இதையடுத்து தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் உள்ளிட்டவர்களோடும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் லாபம் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறியுள்ள ஸ்ருதிஹாசன், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் 'சலார்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.

பன்முக திறமைக் கொண்ட ஸ்ருதிஹாசன், நடிப்பை தாண்டி, பாடகியாகவும் இருந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அவ்வெவ்போது, தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தனது தந்தை கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !