மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1485 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1485 days ago
நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து தயாரித்துள்ள படம் நெற்றிக்கண். மிலிந்த் ராஜூ இயக்கியுள்ள இந்த படத்தில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி: சரியான படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று 3 ஆண்டுகளாக எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளமால் காத்திருந்தேன். மிலிந்த் கதை சொன்னதும் பிடித்துவிட்டது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் என படக்குழுவும் பிடித்ததால் ஒப்புக்கொண்டேன். இது கொரோனாவுக்கு முன்பு திட்டமிடப்பட்ட படம். கொரோனா காரணமாக தள்ளிப்போய் இப்போது ஓடிடியில் ரிலீசாகிறது. தியேட்டரில் வெளியிடத்தான் விரும்பினோம். ஆனால் 3வது அலை அச்சம் இருப்பதால் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விடலாம் என்று ஓடிடியில் வெளியிடுகிறோம்.
இது ஒரு கொடூர வில்லன் வேடம். இந்த கதாபாத்திரத்திற்காக 3 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டேன். நயன் தாராவை ஏற்கனவே சிலமுறை சந்தித்திருக்கிறேன். இந்த படத்தில் அவருடன் நடித்தது மிக சிறந்த அனுபவம். படப்பிடிப்பு தளத்தில் நயன் தாரா, விக்னேஷ் சிவன், மிலிந்த் என எல்லோரும் ஒரு குழுவாக தான் வேலை பார்த்தோம். ஓடிடி என்பதை தவிர்க்க முடியாது. சூரரை போற்று, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களின் வெற்றி ஓடிடியின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. அதே நேரம் தியேட்டர் ரிலீசை தான் சினிமாவில் விரும்புகின்றனர். அந்த அனுபவமே தனி. ஓடிடி மூலம் படங்களின் மார்க்கெட் சர்வதேச அளவிற்கு சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
1485 days ago
1485 days ago