படப்பிடிப்பில் அருண் விஜய் காயம்
ADDED : 1595 days ago
நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் இயக்குனர் ஹரியும் நடிகர் அருண் விஜய்யும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதற்கு இத்தனை காலம் ஆகியுள்ளது. அந்தவகையில் அருன் விஜய் - ஹரி கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு கையில் அடிபட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருண் விஜய்யே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து நாட்களுக்கு எடை தூக்கும் பயிற்சியையும் மேற்கொள்ள போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் அருண் விஜய்.