வடிவேலுவின் டிடெக்டிவ் நேசமணி உண்மையா
ADDED : 1534 days ago
சமீபகாலமாக நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிக்கவில்லை என்றபோதும் அவ்வப்போது படங்கள், வெப்சீரிஸ்களில் அவர் நடிப்பது போன்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக டிடெக்டிவ் நேசமணி என்ற படத்தில் வடிவேலு நடிக்க போவதாகவும், அந்த படத்தை சி.வி.குமார் தயாரிப்பதாகவும் சமூகவலைதளத்தில் வடிவேலு போஸ்டருடன் ஒரு செய்தி வைரலானது.
இதை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது டுவிட்டரில் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛பொய் செய்தியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா... ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா. என்று பதிவிட்டுள்ளார்.
ஆக, வடிவேலுவின் புதிய படம் குறித்த இந்த செய்தியும் வதந்தியாகி விட்டது.