உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் வயிறு எரியுது நெல்சன் : விக்னேஷ் சிவன் கமெண்ட்

என் வயிறு எரியுது நெல்சன் : விக்னேஷ் சிவன் கமெண்ட்

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, டைரக்டர் செல்வராகவன், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் படம் பீஸ்ட். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்ற ஸ்டுடியோவுக்கு கிரிக்கெட் வீரர் தோனி நடித்த விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடை பெற்றதால், விஜய்யை நேரில் சென்று சந்தித்தார் தோனி. அப்போது விஜய்-தோனியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார் நெல்சன். அதையடுத்து நேற்று முழுக்க சோசியல் மீடியாவில் அந்த போட்டோக்கள் வைரலாகி வந்தது.

இந்தநிலையில் அந்த போட்டோ குறித்து தனது டுவிட்டரில் நெல்சனுக்கு சற்றே பொறாமையில் கமெண்ட் கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ்சிவன். அதில், ‛‛ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். 274 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வயிறு எரியுது. ரா பைலை அனுப்பு நெல்சன். அதை வைத்து நான் ஒரு போட்டோ ஷாப்பாவது பண்ணிக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !