சொகுசு கார் வாங்கிய பிக் பாஸ் ஷிவானி : விலையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்
ADDED : 1526 days ago
ஷிவானி நாராயணன் வாங்கியுள்ள புது பிஎம்டபுள்யூ காரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பகல் நிலவு தொடரில் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். பிறகு பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். சமுக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் இவருக்கு இளைஞர் பட்டாளத்தின் ஆதரவு அதிகம். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஷிவானி, சீரியல் சினிமா என பிஸியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சரிவர வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில், அவர் தற்போது புதிய BMW 7 Series 730Ld காரை வாங்கி இருக்கிறார். அந்த காரின் விலை சுமார் 1.7 கோடி ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது. புது கார் வாங்கி இருக்கும் ஷிவானிக்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.