மவுன படத்துக்காக விஜய் சேதுபதியுடன் இணைந்த அதிதிராவ்
ADDED : 1514 days ago
விஜய் சேதுபதி ஹிந்தியில் காந்தி டாக்ஸ் என்ற மவுன படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்தப் படத்தை கிஷோர் பாண்டுரங் பேலேகர் இயக்குகிறார். தற்போது இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதாரி கதாநாயகியாக இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் அதிதி நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. தற்போது இருவரும் இணைந்து காந்தி டாக்ஸ் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படம் மவுனப் படமாக உருவாக உள்ளது. படத்தில் வசனங்கள் இல்லாமல் அமைதிப் படமாக உருவாக உள்ளது. அதிதிராவ் தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்தவர்.