தமிழில் அறிமுகமாகும் மாடல் அழகி
ADDED : 1514 days ago
பெங்களூரை சேர்ந்தவர் பாவ்யா த்ரிகா. சென்னையில் படித்த இவர் மாடலிங் துறையில் இருக்கிறார். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார். கன்னடத்தில் தயாராகும் டாலி என்ற படத்தில் தனஞ்செயா ஜோடியாக நடிக்கிறார்.
தமிழில் கதிர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அவருடன் வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார்கள். துவாரகா ஸ்டூடியோ தயாரிக்கிறது. தினேஷ் பழனிவேல் இயக்குகிறார். பிரசாந்த் பிள்ளை இசை அமைக்கிறார். ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்கிறார்.