மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்த மயில்சாமி
ADDED : 1552 days ago
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் மயில்சாமி. சமீபகாலமாக சமூக சார்ந்த பல விஷயங்களையும் செய்து வருவதோடு, அதுதொடர்பான விஷயங்களுக்கும் குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார் மயில்சாமி.
இதுப்பற்றி அவர் கூறுகையில், ‛பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்தேன். தமிழக அரசு பெட்ரோல் விலையில் 3 ரூபாய் வரியை குறைத்ததை வரவேற்கிறேன்' என்றார் மயில்சாமி.