பவன் கல்யாண் - ராணா பட தலைப்பு அறிவிப்பு
ADDED : 1511 days ago
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, ‛‛அய்யப்பனும் கோஷியும்'' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணும், ராணாவும் நடித்து வருகிறார்கள். நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தை சாகர் சந்திரா இயக்குகிறார்.
தமன் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் பவன் கல்யாணின் பிறந்த நாளான செப்டம்பர் 2-ந்தேதி வெளியாக உள்ளது. 2022 ஜனவரி 12-ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. மேலும் இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி பீம்லா நாயக் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பவன் கல்யாண் பீம்லா நாயக் என்ற போலீசாக நடிக்கிறார். அவரது கேரக்டரின் பெயரைத்தான் படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.