சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் சல்மான்
ADDED : 1510 days ago
லூசிபர் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மோகன்ராஜா இயக்கும் இப்படத்திற்கு காட்பாதர் என்ற டைட்டீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆக்சன் காட்சியோடு தொடங்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சத்யதேவ் ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த காட்பாதர் படத்தில் சிரஞ்சீவியுடன் பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் விரைவில் ஐதராபாத் வரப்போவதாகவும், அதுகுறித்த தகவலை சிரஞ்சீவி அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.