என் மகள் பட்டம் வாங்கிவிட்டாள் : குஷ்பு பெருமிதம்
நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர்.சி தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மகள்களின் புகைப்படங்களை அடிக்கடி தனது சோசியல் மீடியாக்கள் வெளியிட்டு, அவர்களை பற்றி பெருமையாக குறிப்பிட்டு வருகிறார் குஷ்பு. இந்த நிலையில் தற்போது தனது மூத்த மகளான அவந்திகா கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் பெற்று உள்ளதை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள குஷ்பூ, என் மகள் பட்டம் பெற்று விட்டாள். அவள் எனது வயிற்றில் இருந்ததை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன். இப்போது அவள் பெரிய பெண்ணாகி நல்ல விதத்தில் பட்டம் பெற்று எங்களை பெருமைப்படுத்தி விட்டாள். மேலும், நீ ஒரு புதிய உலகில் இனிமேல் அடியெடுத்து வைக்கப் போகிறாய். நீ ஒரு வலிமையான பெண் என்று எங்களுக்கு தெரியும் என்று தன் மகள் குறித்து ஒரு பதிவை சமூகவலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் குஷ்பூ.