10 ஆண்டுகளுக்கு பின் தமிழுக்கு வரும் ஹரிப்பிரியா
ADDED : 1511 days ago
தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, முரண் போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ஹரிப்பிரியா. அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் மீண்டும் கன்னடத்துக்கே சென்று விட்ட அவர் இப்போது அங்கு பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தமிழில் கழுகு புகழ் சத்யசிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா கமிட்டாகியிருக்கிறார். அந்தவகையில் 10 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் ஹரிப்பிரியா. இந்தபடத்தில் சசிகுமார் - ஹரிப்பிரியாவுடன் விக்ராந்த், துளசி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரசன்னா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.