மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1506 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1506 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1506 days ago
ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில், அக்ஷய்குமார், வாணி கபூர், ஹுமா குரேஷி, லாரா தத்தா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'பெல்பாட்டம்'. இப்படம் நாளை(ஆக., 19) தியேட்டர்களில் வெளியாகிறது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மூடப்பட்ட தியேட்டர்கள் பல மாநிலங்களில் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இன்னும் திறக்கப்படவில்லை.
ஹிந்திப் படங்களின் முக்கிய பாக்ஸ் ஆபீஸ் மாநிலமான மகாராஷ்டிராவில் படம் வெளியாகாமல் மற்ற மாநிலங்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் உள்ள தியேட்டர்காரர்கள் 'பெல்பாட்டம்' படத்தைத் திரையிட முடியாத பெரும் வருத்ததில் உள்ளார்கள். இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டபின் வரும் முக்கிய பெரிய படம் 'பெல்பாட்டம்'. இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் வெளியீடு இல்லை, பல மாநிலங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே என்ற நிலையில் தியேட்டர்களுக்கு உதவிடும் வகையில் இந்தப் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவரும் படங்கள் கடந்த சில வருடங்களில் சர்வசாதாரணமாக 100 கோடி வசூலைத் தாண்டும். ஆனால், 'பெல்பாட்டம்' படத்திற்கு அப்படி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து அக்ஷய்குமார் கூறுகையில், “இந்திய முழுவதுமான வசூலில் மகாராஷ்டிரா வசூல் மட்டுமே 30 சதவீதம் வரையில் இருக்கும். எனவே, மற்ற மாநிலங்களில் இருந்து கிடைக்கும் 70 சதவீத வசூலை மட்டுமே நம்பியுள்ளோம், அதுவும் 50 சதவீத இருக்கைகள் அனுமதிதான் உள்ளது. அதனால் 70 சதவீத வசூல் என்பது அதில் பாதியாக 35 சதவீதம்தான் கிடைக்கும். அதிலும் அரங்கம் நிறையவில்லை என்றால் 5 முதல் 8 சதவீதம் கிடைக்காது. எனவே, 27 சதவீத வசூலை நம்பி களத்தில் இறங்கியுள்ளோம். அதுதான் இந்தப் படத்திற்கானது. இந்தப் படம் 30 கோடி வசூல் செய்தாலும் அது 100 கோடி ரூபாய்க்கு சமமானது. 50 கோடி வசூல் செய்தால் அது 150 கோடிக்கு சமம்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு பிரம்மாண்ட பாலிவுட் படத்திற்கே இதுதான் நிலை என்றால் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் தமிழ்ப் படங்களின் வசூல் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
1506 days ago
1506 days ago
1506 days ago