தமிழுக்கு வரும் ஸ்ரத்தா தாஸ்
ADDED : 1525 days ago
மும்பையில் செட்டிலான பெங்காலி பொண்ணு ஸ்ரத்தா தாஸ். சித்து பிரம் சிககுலம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கன்னடம், மலையாளம், பெங்காலி, ஹிந்தி மொழிகளில் சுமார் 50 படங்களில் நடித்தார். தற்போது முதன் முறையாக நேரடி தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்து மாஸ்டர் படத்தின் மூலம் புகழ்பெற்ற மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் அர்த்தம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் நந்தா துரைராஜ், அஜய், அமனி, ஷாகித் உள்பட பலர் நடிக்கிறார்கள். மினர்வா சினிமா சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிக்கிறார், பவன் சென்னா ஒளிப்பதிவு செய்கிறார், ஹர்ஷவர்த்தன் ராமேஸ்வர் இசை அமைக்கிறார். மணிகாந்த் தலகுட்டி இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகிறது.