மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1478 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1478 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1478 days ago
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி சர்வைவர். தனி தீவில் விடப்படும் போட்டியாளர்கள் 100 நாட்கள் காட்டில் தங்கி இருக்க வேண்டும். 100 நாளை நிறைவு செய்யும் போட்டியாளருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் ஒரு தனித்த தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கள் அச்சத்தினை தைரியமாக எதிர்கொண்டு, கடும் சவால்களைக் கடந்து தங்கள் பயணத்தைத் தொடர மேற்கொள்ளும் போராட்டங்களை நேயர்கள் காணலாம். களமிறங்கும் போட்டியாளர்களின் ஆற்றல், தைரியம், விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் ஒரு அசல் போட்டியாக இந்த நிகழ்ச்சி இருக்கும். என்கிறார் அர்ஜூன்.
1478 days ago
1478 days ago
1478 days ago