உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம்

100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம், 100 கோடி வசூலை ஈட்டிவிட்டது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொங்கலுக்கு வந்த படங்களில் இந்த படத்துக்கே வசூல் அதிகம். அதேபோல் இந்த ஆண்டின் முதல் 100 கோடி பட பட்டியலில் பராசக்தி இடம் பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், சிவகார்த்திகேயன் தரப்பும், அவரின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 'டான், டாக்டர், அமரன், மதராஸி படங்களை தொடர்ந்து 5வது முறையாக சிவகார்த்திகேயன் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இது சாதனைதான். பட ரிலீஸ்க்கு முன்பு இந்த படம் லாபம் பார்த்துவிட்டதாக தகவல். அதனால், வணிக ரீதியாகவும் வெற்றி படம். தவிர, படம் பார்த்தவர்கள் சிவகார்த்திகேயன் கேரக்டரை, நடிப்பை பாராட்டினார்கள். அதனால், விமர்சனங்கள் வந்தாலும் இது வெற்றி படம்தான்.

அதேசமயம், இனிமேல் மதராஸி மாதிரியான ஆக் ஷன் படம், இந்த மாதிரியான சீரியஸ் படங்களை குறைத்துவிட்டு ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் டான், டாக்டர் மாதிரியான கலகல படங்களை அவர் அதிகம் பண்ண வேண்டும் என்பது எங்கள் ஆசை. அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப் போகிறார். அதில் ஹீரோயிசமும், காமெடியும் துாக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !