உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இப்பவும் கதை கேட்கும்போது துாங்குறீங்களா? : அஸ்வின் சொன்ன பதில்

இப்பவும் கதை கேட்கும்போது துாங்குறீங்களா? : அஸ்வின் சொன்ன பதில்

விக்னேஷ் கார்த்திக் இயக்கி, நடிக்கும் ஹாட்ஸ்பாட் 2 மச் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பிரியா பவானி சங்கர், பவானிஸ்ரீ, அஸ்வின் உட்பட பலர் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யாவும் முக்கியமான ரோலில் வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் நான் கதை கேட்க ஆரம்பிக்கும்போது துாங்கிவிடுவேன். 40 கதை கேட்டு அப்படி துாங்கியிருக்கிறேன் என்று அஸ்வின் பேசியது சர்ச்சை ஆனது. கதை சொல்ல வருபவர்களை இப்படி அவமானப்படுத்துவதா என அவரை பலரும் ட்ரோல் செய்தனர்.

இந்த படத்திலும் அவர் நண்பர்'' கதை கேட்டால் எனக்கு துாக்கம் வரும்'' என்று அவரிடம் பேசுவது போல டயலாக் இடம் பெற்றுள்ளது. அதனால், இப்போது கதை கேட்டால் நீங்க துாங்கிவிடுகிறீர்களா, இல்ல, முழிச்சிட்டு இருக்கீங்களா' என சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் நிருபர்கள் கேட்க, அதற்கு அஸ்வின் அளித்த பதில் ''அப்போது நான் சொன்ன 40 என்ற எண்ணிக்கை பொதுவாக சொன்னது, அதற்கு மேலும் கேட்டு இருக்கலாம். அதற்கு குறைவாகவும் கேட்டு இருக்கலாம். நீங்க கதை கேட்டால் துாங்காமல் இருந்து இருப்பீர்களா? படம் பார்க்கும்போதே துாங்குகிறீர்களே? அதை நான் தியேட்டரில் பார்க்கிறேன். நான் யாரையும் புண்படுத்த அப்படி பேசவில்லை. அந்த பேச்சுக்கு அப்பவே விளக்கம் சொல்லி வீடியோ வெளியிட்டு விட்டேன். இப்பவும் அந்த கேள்வியை மீண்டும் கேட்டால் என்னை குத்துகிறீர்கள், காயப்படுத்துகிறீர்கள்' என அர்த்தம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !