உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆப்கான் பெண்களை நினைத்து கதறி அழணும்போல இருக்கு: லட்சுமி ராமகிருஷ்ணன்

ஆப்கான் பெண்களை நினைத்து கதறி அழணும்போல இருக்கு: லட்சுமி ராமகிருஷ்ணன்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். தலிபான்களின் சட்டதிட்டம் பெண்களை அடிமைகளாகவே பார்க்கும். இதனால் சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தான் பெண்கள் குறித்து கவலை தெரிவித்து வருகிறது.

இதுகுறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது : ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண் பிள்ளைகளின் நிலை என்னவாகும்? இது பற்றி ஐ.நா. ஏதாவது செய்ய முடியுமா?. எதுவும் தெரியவில்லை ஆனால் கவலை, பயம், மன அழுத்தமாக இருக்கிறது. கதறி அழ வேண்டும் போன்று இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !