உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதில் உள்ளது மகிழ்ச்சி.... காஜல் சொல்கிறார்...

எதில் உள்ளது மகிழ்ச்சி.... காஜல் சொல்கிறார்...

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். திருமணம் முடிந்த பின்னும் இப்போது நடிகைகளுக்கான இமேஜ் சற்றும் குறைவதில்லை. அதை ஏற்கெனவே சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள் நிரூபித்துவிட்டார்கள்.

தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் சிறிது ஓய்வெடுக்க வேண்டும் என்று காஜல் அகர்வால் ஏற்கெனவே சொல்லியிருந்தார். அதன்படி தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.

நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சி பொங்க குளித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து தத்துவமாகவும் ஒரு பதிவிட்டுள்ளார்.

“மகிழ்ச்சி என்பது உங்களது சொந்த அலைகளை உருவாக்குவது... ஒரு நல்ல மனநிலையை உருவாக்க ஒரே ஒரு நீச்சல் போதும்” என்பதுதான் காஜல் அகர்வால் சொன்ன தத்துவம்.

காஜல் அகர்வால் நீச்சல் உடை புகைப்படத்தை மட்டும் பார்க்காமல் அவர் தத்துவத்தையும் படித்து ரசியுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !