பிருத்விராஜ் - அல்போன்ஸ் புத்ரன் கூட்டணியில் முதன்முறையாக நயன்தாரா
ADDED : 1559 days ago
தற்போது தமிழில் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் ஹிந்தி படம் என மூன்று படங்களில் நடித்து வரும் நயன்தாரா,அடுத்தபடியாக நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் மலையாளத்தில் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், காதல் கலந்த வித்தியாசமான திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தை பிருத்விராஜ் தயாரித்து நடிக்கிறார். அந்தவகையில் முதன் முறையாக பிருத்விராஜ்க்கு ஜோடியாகும் நயன்தாரா, அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்திலும் இப்போது தான் முதன்முதலாக நடிக்கப்போகிறார்.