ஸ்ருதிஹாசன் எங்கே - தேடும் ரசிகர்கள்
ADDED : 1505 days ago
நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வீட்டில் வசித்து வந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு அந்த வீட்டை கட்சி அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்தார். இந்த வீட்டை புதுப்பிக்கும் பணி சில நாட்களாக நடந்த நிலையில், தற்போது அந்தப் பணிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், அண்ணி கோமளம், சுகாசினி மணிரத்னம், அனு ஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் அந்த வீட்டில் நடந்த பூஜையில் கலந்துக் கொண்டுள்ளனர். இதையடுத்து அனைவரும் இருக்கும் குடும்ப புகைப்படங்களை நடிகை சுகாசினி, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை சுகாசினி மணிரத்னம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டார். அதில் கமல்ஹாசன், சாருஹாசன், அனுஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் உள்ளிட்டவர்கள் அதில் காணப்பட்டனர். இதைப்பார்த்த ரசிகர்கள் சுருதி ஹாசன் எங்கே எனக் கேள்வி எழுப்பினர்.இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.