ராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் ரகுல் பிரீத் சிங்
ADDED : 1519 days ago
தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு - அமலாபால் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். இப்படம் தெலுங்கில் ரக்சாசுடு என்ற பெயரில் ரீமேக் ஆனது. பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் - அனுபமா பரமேஸ்வரன் நடித்தனர். இந்தநிலையில் தற்போது ராட்சசன் படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் அக்சய்குமார் - ரகுல்பிரீத்சிங் ஜோடி சேருகின்றனர். இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறது. ஏற்கனவே நான்கு ஹிந்தி படங்களில் தற்போது பிசியாக நடித்து வரும் ரகுல் பிரீத் சிங்கிற்கு ராட்சசன் ஹிந்தி ரீமேக் ஐந்தாவது படமாகும்.