மகான் - விக்ரம் 60 பட தலைப்பு
ADDED : 1566 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரம் நடித்து வரும் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதுவரை பெயர் வைக்காமல் விக்ரம் 60 என குறிப்பிட்டு வந்தவர்கள் இப்போது மகான் என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தலையில் கொம்பு, நிறைய கைகளுடன் புல்லட்டில் வருவது போன்று போஸ் கொடுத்துள்ளார் விக்ரம். இதை அவரது ரசிகர்கள் வைரலாக்கினர்.