சாணிக்காயிதம் பணிகள் விறுவிறுப்பு
ADDED : 1509 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் சாணிக்காயிதம். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செல்வராகவனின் மிரட்டலான போட்டோக்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிந்ததை அடுத்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் உடனடியாக துவங்கி உள்ளது. தற்போது செல்வராகவன் டப்பிங் பேசி வருகிறார். மற்ற பணிகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. ஓரிரு மாதத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர். இதனிடையே தியேட்டர்கள் திறப்பில் சிக்கல் நீடிப்பதால் சாணிக்காயிதம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.