தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது?அமைச்சர் பதில்
ADDED : 1509 days ago
கொரோனா முதல் அலை தொடங்கியதில் இருந்தே சினிமா தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. கொரோனா முதல் அலை குறைவடைந்தபோது 50 சதவிகிதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டபோதும் அதையடுத்து கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதன்காரணமாக முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் மா.சுப்ரமணியத்தை சந்தித்து தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதோடு கொரோனா நெறிமுறைகளை முறையாக கடைபிடிப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வாரத்தில் மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி அதையடுத்து தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர். மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.