கதை தான் முக்கியம் - ஐஸ்வர்யா ராஜேஷ்
ADDED : 1509 days ago
புதியவர் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள பூமிகா படம் ஆக., 22ல் விஜய் டிவியில் நேரடியாக வெளியாகிறது. கடந்த மாதம் தான் ஐஸ்வர்யாவின் திட்டம் ரெண்டு படம் ஓடிடியில் வெளியான நிலையில் இவரின் பூமிகா படம் டிவியில் வெளியாகிறது.
படம் குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், ‛‛இந்த படத்திலும் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளேன். இதுமாதிரியான வேடங்களில் அதிகம் நடிக்கும் நடிகை நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். இருப்பினும் அதுப்பற்றி எனக்கு எந்த தயக்கமும் இல்லை, எனக்கு கதை தான் முக்கியம். இந்த படத்தை பார்த்த பின் ஒவ்வொருத்தரும் குறைந்தபட்சம் ஒரு செடியையாவது நட்டு வைக்கணும் என எண்ணுவார்கள்'' என்கிறார்.