மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1477 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1477 days ago
பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராமுக்கு 2 மகள்கள். இளைய மகள் காயத்ரி ரகுராம் சில படங்களில் நடித்தார். இப்போது, டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து வருவதுடன், அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மூத்த மகள் சுஜா ரகுராம் திருமணத்துக்கு பின் கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார். தற்போது அவர் ஒரு ஹாலிவுட் படத்தை தயாரித்து, இயக்கி இருக்கிறார். படத்துக்கு, 'டேக் இட் ஈஸி' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இதில் ரகுராமின் பேரக்குழந்தைகள் திரிசூல் மனோஜ், சனா மனோஜ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இசையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். படம் பற்றி சுஜா ரகுராம் கூறியதாவது, 'திருமணத்துக்கு பின் அமெரிக்கா வந்த நான் ஆலிவுட் இயக்குனர்கள் பென் ஜூடி லெவின், பாயு பென்னட், டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்தேன். இந்த படத்தை என் கணவர் மனோஜ் தயாரித்திருக்கிறார். எனக்கு தமிழில் படங்கள் இயக்க ஆசை. சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா வந்த ரஜினி எங்கள் வீட்டுக்கு வந்தார். படம் பற்றி சொன்னதும் வாழ்த்து தெரிவித்தார்'.
இவ்வாறு அவர் கூறினார்.
1477 days ago
1477 days ago