மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1478 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1478 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1478 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1478 days ago
நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து படங்களைத் தயாரித்து வருகினறனர். இந்நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூழாங்கல்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கியிருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் அனைவரின் பாராட்டை பெற்றது. டைகர் பிரிவில் விருதை வென்று உலக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பல சர்வதேச விருதுகளையும் இந்தப் படம் குவித்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் வினோத் ராஜ், தனது தோழியும் காதலியுமான அறிவுநிலா என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டுத் தரப்பில் இருந்து இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கோயம்புத்தூரில் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்தை இயக்குனர் ராம் முன்னின்று சாதி மறுப்பு திருமணமாக நடத்தி வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
1478 days ago
1478 days ago
1478 days ago
1478 days ago