சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : 1505 days ago
சினிமா போன்று சின்னத்திரைக்கும் பல சங்கங்கள் உள்ளன. இதன் கூட்டமைப்பாக பெப்சி சங்கத்தை போன்று தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு இருக்கிறது. இதன் நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.
சங்க வளாகத்தில் நடந்த எளிய விழாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் தளபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.ரவிவர்மா முன்னிலை வகித்தார். இவர்கள் உள்பட துணை தலைவர் சி.ரங்கநாதன், பொருளாளார் வி.ராஜா ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
விழாவில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக இயக்குனர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.