கொரோனா ஊரடங்கை மையப்படுத்தி உருவாகும் லாக்டவுன்
ADDED : 1604 days ago
கொரோனா காலத்தில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கால் மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளானார்கள். இதனை பயன்படுத்தி பல படங்கள் தயாராகி வருகிறது. அந்த வரிசையில் புதுமுகங்கள் இணைந்து லாக்டவுன் என்ற படத்தை உருவாக்குகிறார்கள்.
அங்கிதா புரொடக்ஷன் சார்பில் எஸ்.முரளி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் இது உருவாகிறது. அமித் ஜாலி கதாநாயகனாகவும், கதாநாயகியாக கீதாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சுந்தரம் மாஸ்டர், பிரகாஷ் ராஜ், நேஹா சக்சேனா, துளசி, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஜாசி கிப்ட் இசை அமைக்கிறார். பி.கே.எச்.தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், கன்னடத்தில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பெங்களூரில் நடந்து வருகிறது.