சுதீப் படம் : உறுதிப்படுத்திய வெங்கட்பிரபு
ADDED : 1547 days ago
சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு , அந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக உள்ளார். அடுத்ததாக நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சுதீப்புடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, செப்-2ல் வரப்போகும் அவரது பிறந்தநாளுக்கு இப்போதே அட்வான்ஸ் பிறந்தநாள் வாழத்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, சுதீப்பை நேரில் சந்தித்தபோது அவரது கைமணத்தில் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது என சிலாகித்து கூறி அவரை சிறந்த குக் என பாராட்டியுள்ள வெங்கட்பிரபு, நாம் இருவரும் இணைந்து பணியாற்றும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.