உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படிக்கட்டில் பயணம் செய்த நயன்தாரா - சமந்தா

படிக்கட்டில் பயணம் செய்த நயன்தாரா - சமந்தா

தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் சாகுந்தலம் படத்தில் நடித்து வந்த சமந்தா சமீபத்தில் தான் அந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இதையடுத்து அவர் விஜய்சேதுபதியுடன் இணைந்து விக்னேஷ் சிவன் டைரக்சனில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நடிக்க துவங்கி, தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார்.

இந்தப்படத்தில் நயன்தாரா - சமந்தா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றதாம். அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரியும் அற்புதமாக ஒர்க்அவுட் ஆகியுள்ளதாம். அந்தவகையில் நயன்தாராவும் சமந்தாவும் விஜய்சேதுபதியுடன் பேருந்து படிக்கட்டில் நின்றபடியே பயணிக்கும் வீடியோ கிளிப் ஒன்று, சத்யா படத்தில் இடம் பெற்ற வளையோசை கலகலவென்று' என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !