உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வீரப்பன் குடும்பத்தால் காமெடி படத்திற்கு சிக்கல்

வீரப்பன் குடும்பத்தால் காமெடி படத்திற்கு சிக்கல்

‛யூ-டியூபர்' ஆக காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கும் படத்தை யாசின் இயக்குகிறார். படத்திற்கு, ‛வீரப்பின் கஜானா' என, தலைப்பு வைத்தனர். இதில் காட்டையும் அதை சார்ந்த விஷயங்களையும், பேண்டஸி, காமெடி கலந்து சுவாரஸ்யமாக கூறியுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வீரப்பனின் குடும்பத்தார். ‛தலைப்பில் வீரப்பனின் பெயரை பயன்படுத்த வேண்டாம்' என வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து படத்தின் தலைப்பை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும், ‛படத்தின் கதைக்கும் வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என, கூறியுள்ள படக்குழு, இன்னும் தலைப்பை முடிவு செய்யவில்லை. விரைவில் புதிய தலைப்பை அறிவிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !