உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்து டில்லி செல்லும் பீஸ்ட் படக்குழு

அடுத்து டில்லி செல்லும் பீஸ்ட் படக்குழு

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு நடித்து வரும் பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில், இரண்டாம், மூன்றாம்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினத்தோடு மூன்றாம்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்நிலையில் நான்காம் கட்ட படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் மீண்டும் சென்னையில் தொடங்கி அதையடுத்து டில்லி சென்று ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். பிறகு சென்னை திரும்பும் பீஸ்ட் படக்குழு, அதையடுத்து ரஷ்யா சென்று படமாக்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !