லாரன்சின் ருத்ரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 1518 days ago
பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தற்போது தயாரித்து இயக்கி வரும் படம் ருத்ரன். லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் சரத்குமார், நாசர். பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ருத்ரன் படத்தை 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.