செல்ல நாய் குட்டி உடன் கீர்த்தி சுரேஷ் போட்டோஷூட்
ADDED : 1514 days ago
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து 'சாணிக் காயிதம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதேபோன்று தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் 'சர்காரு வாரி பாட்டா' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது செல்லப்பிராணியுடன் கொஞ்சி மகிழும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தியின், இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.