ஷங்கர் படத்தில் இரண்டு பிரபல மலையாள நடிகர்கள்
ADDED : 1519 days ago
ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து முடித்து விட்டதால் தனது பட வேலைகளை துரிதப்படுத்தியுள்ளார் ஷங்கர். மேலும், அரசியல் கலந்த ஆக்சன் கதையில் தயாராகும் இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க அஞ்சலியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகர்களான ஜெயராம், பகத் பாசில் ஆகிய இருவரையும் ஷங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தில்ராஜூ தயாரிக்கும் இந்த பான் இந்தியா படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.