மொட்டைத்தலை, கடா மீசை : மிரட்டும் பஹத் பாசில்
ADDED : 1548 days ago
தற்போது தமிழில் கமலின் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பகத் பாசில், தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் புஷ்பா படத்தில் அதிரடி வில்லனாக நடிக்கிறார். மேலும், செம்மரக் கட்டைகளை கடத்தும் கதை பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் முதன் முறையாக தனது ஸ்டைலிஷ் கெட்டப்பில் இருந்து விடுபட்டு ஒரு வில்லத்தனம் கலந்த ஹீரோவாக நடிக்கிறார் அல்லு அர்ஜூன்.
அதனால் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பகத்பாசில் எந்தமாதிரியான கெட்டப்பில் நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தில் பகத்பாசில் நடிக்கும் கேரக்டரின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மொட்டைத்தலை, கடா மீசை கெட்டப்பில் காவல்துறை அதிகாரியாக மிரட்டலாக தோன்றுகிறார் பகத்பாசில்.