அன்பு சகோதரிகளாக மாறிய சமந்தா - நயன்தாரா
ADDED : 1597 days ago
பொதுவாக முன்னணியில் இருக்கும் இரண்டு கதாநாயகிகள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது என்பது அபூர்வமான ஒரு விஷயம். அப்படியே நடித்தாலும் ஒருவர் பிளாஷ்பேக்கில் மட்டும் வந்து செல்வது போன்றுதான் கதை அமைந்து இருக்கும். ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா இருவரும் இணைந்து நடித்து இருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.
அதேசமயம் கதைப்படி இருவரும் பாசமான சகோதரிகளாக நடித்திருக்கிறார்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டைட்டிலுக்கேற்றபடி இருவருமே விஜய்சேதுபதியை விரும்பும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் படத்தில் இவர்கள் இருவரும் அதிக காட்சிகளில் இணைந்து வரும் விதமாகத்தான் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படத்திற்காக இவர்கள் இருவருமே ஒரு பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்யும் வீடியோ ஒன்று கூட சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.