அக்.,1ல் வரலட்சுமியின் சிங்கப்பார்வை
ADDED : 1546 days ago
தமிழ் சினிமாவில் தற்போது அதிகமான படங்களை கைவசம் வைத்துள்ள நடிகைகளில் வரலட்சுமியும் ஒருவர். தமிழில் சேஸிங், காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஜேகே இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் வரலட்சுமி, இப்படத்தில் கண் பார்வையற்றவராக நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், கமல் பார்வையற்றவராக நடித்த ராஜபார்வை படத்தின் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என அத்தலைப்பையே முதலில் வைத்திருந்தனர். இந்நிலையில், படத்தின் தலைப்பை சிங்கப்பார்வை என படக்குழு மாற்றியது.
இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அக்.,1-ம் தேதி வெளியாகும் இப்படத்தை டி.நாராயணன் தயாரித்துள்ளார்.