திருமணத்துக்கு ஓகே சொன்ன திரிஷா?
ADDED : 1544 days ago
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. தற்போது இவர் கைவசம், 'பொன்னியின் செல்வன்' 'சதுரங்க வேட்டை 2,' 'ராங்கி,' 'கர்ஜனை' ஆகிய படங்கள் உள்ளன. இவற்றுள் 'சதுரங்க வேட்டை - 2,' 'ராங்கி,' 'கர்ஜனை' ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மேற்கொண்டு எந்த புதுப் படத்திலும் அவர் கமிட் ஆகவில்லை. அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் தான் புது படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.