பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கை படத்தில் ரஜினி, அமிதாப்
ADDED : 1497 days ago
சமூக சேகவரான பாலம் கல்யாண சுந்தரம் தான் வைத்திருந்த சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி கொடுத்தவர். இவரை தனது வளர்ப்பு தந்தையாக ஏற்ற ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கும் பாலம் கல்யாண சுந்தரத்தை அழைத்துச் சென்றார். ஆனால் பின்னர் அவர் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகி உள்ளது. இதில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி அன்பு பாலம் என்ற புத்தகத்தில் பாலம் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார். விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.