உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதருக்கு மாறும் கமல்ஹாசன்

கதருக்கு மாறும் கமல்ஹாசன்

பிக்பாஸ் தமிழ் 5-வது சீசனுக்காக புரொமோ ஷூட் தயாராகிவிட்டது. அந்த புரொமோ ஷூட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் தற்போது வைரல்ஆகி வருகின்றது. இதுவரை எல்லா சீசன்களுக்கும் காஸ்ட்யூம் டிசைனராக இருந்த அம்ரிதா ராம் தான் இந்த சீசனுக்கும் கமல்ஹாசனின் காஸ்ட்யூம் டிசைனர்.

அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, கமல்ஹாசனை புதிதாக எப்படி திரையில் காட்டலாம்னு நிறையவே யோசித்தேன். இந்த முறை நம்மளுடைய சொந்த தயாரிப்பான கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதே மாதிரி எல்லாமே கைகளால் தயாரிக்கப்பட்ட இயற்கையான ஆடைகளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம். கதர் ஆடைகள்ல ஒரு ஐரோப்பியன் தோற்றம் கமல் சாரை இந்த சீசன் முழுக்க பார்க்கலாம்'.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !