உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் வாத்தி கம்மிங் செய்த சாதனை

விஜய்யின் வாத்தி கம்மிங் செய்த சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. குறிப்பாக, வாத்தி கம்மிங் பாடல் இந்தியாவை தாண்டி பல நாடுகளில் பாராட்டு பெற்றது. பல சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் இந்த பாடலுக்கு தாங்கள் நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இந்தநிலையில், தற்போதைய நிலவரப்படி வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 25 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதோடு, 26 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !