நிறைவடைகிறது 'பூவே பூச்சூடவா' சீரியல்
ADDED : 1497 days ago
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய பூவே பூச்சூடவா தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சிக்கலான காதல் கதையுடன் ரசிகர்கள் மனதை கவர்ந்த இந்த தொடர் 1140 எபிசோடுகளை கடந்து வெற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த தொடர் தற்போது முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூவே பூச்சூடவா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகர் ஈஸ்வர், சீரியல் முடியப்போகும் தகவலை உறுதிபடுத்தியுள்ளார். 'பூவே பூச்சூடவா' தொடரின் இறுதி எபிசோடு செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.